குறிஞ்சி இன மக்கள் எழுச்சி கழக தலைவர் உத்தம குமரன் ஆட்சியருக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு குறிஞ்சி இன மக்கள் எழுச்சி கழக தலைவர் உத்தம குமரன் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தேவன் ஒடை, கருப்பூர், மண்ணியார் வாழ்க்கை, திருவைகாவூர் ஆகிய பகுதிகளில் ஏராளமான மலைக்குறவர் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் கூடை பின்னும் தொழில் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மாற்று கூரை செய்ய கூட வழியின்றி தவித்து வரும் குடும்பத்தினர்களுக்கு மாற்று இடம் வழங்கி,10-ஆம், வகுப்பு 12-ஆம் வகுப்பு படித்து வரும் குழந்தைகளுக்கு ஜாதி சான்று வழங்க வேண்டும். அரசு நலத்திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். கணவரை இழந்து வறுமையில் வாடி வரும் மாதவி என்ற பெண்ணுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் என அவர் அந்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளார்.