ஆற்றில் கொட்டப்பட்டிருக்கும் கழிவுகளை அகற்ற பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள காவலூர் பகுதியில் பாலாறு அமைந்துள்ளது. இந்த ஆற்றில் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மருந்து கழிவுகள், குப்பை போன்றவற்றை கொட்டுகின்றனர். இதனால் அந்த குப்பைகள் மண்ணுக்குள் புதைந்து மக்கள் குடிக்கும் குடிநீரில் கலந்து நோய்த்தொற்று ஏற்படுகிறது.
எனவே மருத்துவ கழிவுகளை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் , ஆற்றை சுத்தப்படுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.