ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்த கொட்டகையை அதிகாரிகள் அகற்றியுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள கே.வி.குப்பம் ராஜ வீதி பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கார் நிறுத்துவதற்காக தகர கொட்டகை அமைத்துள்ளார். இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதால் கொட்டகையை உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர்.
இதனையடுத்து தாசில்தார் சரண்யா ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பலதா சரவணன், காவல்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றியுள்ளனர்.