பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 35 லட்சம் நபர்களுக்கு 1 சிலிண்டருக்கு ரூபாய் 200 மானியம் வழங்கப்படுமென எண்ணெய் நிறுவனஅதிகாரிகள் கூறினர். நாடு முழுதும் ஏழை மக்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கும் பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தை பிரதமர் மோடி சென்ற 2016 ஆம் ஆண்டு மே 1-ம் தேதி தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் கீழ் சிலிண்டர் பெறுவதற்கான வைப்புத்தொகை உட்பட ரூபாய் 1,600-ஐ மத்திய அரசு வழங்குகிறது. இத்திட்டத்தின் பயனாளிகளுக்கு காஸ் அடுப்பும், முதலாவது சிலிண்டரும் இலவசமாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.