உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக என் வி. ரமணா பதவியேற்றுக்கொண்டார்.
குடியரச மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ராம்நாத் கோவிந்த் என் வி. ரமணாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட ரமணா அடுத்த ஆண்டு ஆகஸ்டு 26-ஆம் தேதி வரை தலைமை நீதிபதியாக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருக்கும் எஸ்.ஏ.பாப்டேவின் பதவிக் காலம் வரும் 23-ம் தேதியோடு முடிகிறது. இதையடுத்து புதிய நீதிபதிக்கான உத்தரவை குடியயரசுத் தலைவர் பிறப்பித்தார்.