உச்ச நீதிமன்றத்தின் 49 வது தலைமை நீதிபதியாக யு.யு. லலித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள என். வி. ரமணா ஆகஸ்ட் 26 ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெறுகிறார். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் 49 வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் நியமனம் செய்யப்பட்டுள்ளார். யு.யு. லலித் வெறும் 74 நாட்கள் மட்டுமே அந்த பதவியில் இருந்து நவம்பர் 8ல் பணி ஓய்வு பெறுவார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 1957-ல் பிறந்த லலித் 1983ல் வழக்கறிஞராக பணியை துவங்கினார். 2ஜி அலைக்கற்றை வழக்கில் சிபிஐ தரப்பில் அரசு வழக்கறிஞராக லலித் செயல்பட்டுள்ளார். லலித் பெயரை என்வி ரமணா பரிந்துரைத்த நிலையில் அவரை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார்..