அசாம் மாநிலம் கவுகாத்தி பகுதியில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 2 பேர் சென்ற பிப்ரவரி 16ஆம் தேதி சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் அச்செயலை செல்போனில் வீடியோவாக எடுத்து
இது குறித்து வெளியே யாரிடமும் சொல்லக் கூடாது என்று சிறுமியை மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன சிறுமி நடந்த கொடூரம் தொடர்பாக யாரிடமும் கூறவில்லை. இதையடுத்து அந்த 2 பேரும் பிப்ரவரி 19ஆம் அச்சிறுமியை ஒரு ஓட்டலுக்கு வருமாறு அழைத்துள்ளனர்.
அதன்படி அந்த சிறுமி ஓட்டலுக்கு சென்றுள்ளார். அப்போது அந்த இருந்த 2 பேரும் தன் நண்பர்கள் மேலும் 3 நபர்களுடன் சேர்ந்து கொண்டு சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர். அதன்பின் இது குறித்து அந்த சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அச்சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். தற்போது பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.