Categories
மாநில செய்திகள்

உச்சக்கட்ட கொடூரம்…. கண்ணீருடன் தமிழ்நாடு மாணவர்கள்…. பரபரப்பு வீடியோ…..!!!!!

ரஷ்யா- உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைப் பிரச்னையானது நீண்ட காலமாகமே இருந்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார்.

தற்போது உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 4-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ருமேனிய எல்லைக்கு வந்த தமிழ்நாட்டு மாணவ-மாணவிகள் இந்தியா திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். மீட்பு விமானங்கள் வரவில்லை என்றும் அழைத்து செல்வதில் பாரபட்சம் என்றும்  தமிழக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கடும் சிரமங்களுக்கு இடையே எல்லைக்கு வந்து சுமார் 48 மணி நேரமாக கடும் குளிரில் காத்திருப்பதாகவும், உணவு, குடிநீர் உள்ளிட்டவை இன்றி தவித்து வருவதாகவும் மாணவர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |