ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் கடந்த ஒரே நாளில் மட்டும் கொரோனாவால் 5,01,635 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
சீனாவிலிருந்து முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா அனைத்து நாடுகளுக்கும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது.
இந்த கொரோனா அடுத்தடுத்து பல உருமாற்றங்களை பெறுவதால் உலகநாடுகள் பெரும் அச்சத்திலுள்ளது. இந்நிலையில் பிரான்ஸில் உச்சகட்ட பாதிப்பாக கடந்த ஒரே நாளில் மட்டும் கொரோனாவால் 5,01,635 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இதனால் அந்நாட்டில் கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,73,02,548 ஆக அதிகரித்துள்ளது. அதோடு மட்டுமின்றி கொரோனாவால் சிகிச்சை பலனின்றி கடந்த ஒரே நாளில் மட்டும் 467 பேர் உயிரிழந்துள்ளார்கள்.