Categories
தேசிய செய்திகள்

உச்சகட்ட பரபரப்பு…. 75 மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு…. தீவிர ரோந்து பணியில் போலீசார்….!!!!

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. அதனால் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. இன்று பிற்பகலுக்குள் உத்திரபிரதேசம், உத்திரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார் என்று தெரியவரும்.

நாட்டிலேயே மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 403 தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெறுகிறது. அதனால் வாக்குப்பதிவு மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் வாரணாசி கமிஷனரட் பகுதி உட்பட 25 மாவட்டங்களிலும் பதற்றம் நிறைந்த பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மொராதாபாத் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |