உக்ரேனின் துறைமுக நகரமான மரியுபோலிலுள்ள மசூதி ஒன்றின் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாடு குற்றம்சாட்டியுள்ளது.
உக்ரேன் மீது அபார பலம் கொண்ட ரஸ்யா 18 ஆவது நாளாக இன்று போர் தொடுத்து வருகிறது. மேலும் ரஷ்யா உக்ரைன் மீது குண்டுமழை பொழிந்து வருகிறது. அது மட்டுமின்றி தரை, வான், கடல் என மும்முனைகளிலிருந்தும் ரஷ்யா உக்ரேன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு உக்ரைனும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. ஆகையினால் இருதரப்பு மோதலில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே உக்ரைனின் துறைமுக நகரமாக மரியுபோல் உள்ளது.
இந்த மரியுபோலிலுள்ள மசூதி ஒன்றிற்குள் ரஷ்யாவின் தொடர் தாக்குதல் காரணமாக உள்ளூர் மக்கள் 80-க்கும் மேற்பட்டோர் தஞ்சமடைந்துள்ளார்கள். இந்நிலையில் ரஷ்ய படைகள் இந்த மசூதியின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரேன் குற்றம்சாட்டியுள்ளது. இருப்பினும் இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல் தற்போது வரை வெளியாகவில்லை.