Categories
மாவட்ட செய்திகள்

உச்சகட்ட கொடூரம்… “மகனுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை”…. கணவர் இறந்த மறுநாளில் விபரீத முடிவு…!!!!!!!

கோபி அருகே கணவன் இறந்த மறுநாளே மகனுக்கு விஷம் கொடுத்து மனைவியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.

கோபி அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் லோகநாதன் பத்மாவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஹரி குக விக்னேஷ் எனும் ஒரு மகன் உள்ளார். லோகநாதன்  அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்த சூழலில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் நடந்த விபத்தின் காரணமாக லோகநாதன் வேலையை  இழக்க நேரிட்டது. இதனால் வருமானம் இல்லாமல் குடும்பம் நடத்த சிரமப்பட்டுள்ளார். கடன் வாங்கி சமாளித்து வந்தார். ஒரு காலகட்டத்தில் கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி தருமாறு லோகநாதனுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர்.

ஆனால் அவரிடம் பணம் இல்லாததால் கடனை செலுத்த முடியவில்லை. அதனால் மனமுடைந்த லோகநாதன் நேற்று முன்தினம் ஹரிகுக விக்னேஷை டியூஷனுக்கு அனுப்பிவிட்டு கோபி வாய்க்கால் ரோட்டில் உள்ள நகராட்சி பூங்கா அருகே சென்றுள்ளார். அதன் பின் அங்கு தான் வாங்கி வைத்திருந்த விஷத்தை குடித்துவிட்டு மயங்கிய நிலையில் காணப்பட்டார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி லோகநாதன் நேற்று முன்தினம் இரவு இறந்து விட்டார். இதனால் மணமுடைந்த பத்மாவதி தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார்.

தானும் இறந்துவிட்டால் தன்னுடைய மகன் நிலைமை  என்னவாகும் என வருந்தியதால் மகனையும் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளார். இந்த சூழலில் நேற்று காலை ஹரிகுக விக்னேஷுக்கு விஷத்தை கொடுத்து குடிக்க வைத்துள்ளார். அதன்பின் பத்மாவதி விஷத்தை குடித்தார். இதில் இரண்டு பேரும் மயங்கி நிலையில் கிடந்தனர். இது பற்றி அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இது பற்றி கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த  சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Categories

Tech |