இரண்டு பெண்களை கொலை செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்
கேரள மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்யும் பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார்.இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போய் உள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடினர்.
ஆனால் அந்த பெண் கிடைக்கவில்லை. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சந்தேகத்தின் பேரில் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த பகவந்த் சிங், அவரது மனைவி லைலா, முகமது ஷபி ஆகியோரை கைது செய்தனர். இது குறி த்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் கூறியதாவது. பகவந்த்சிங் மசாஜ் சிகிச்சையாளராக உள்ளார். இவரது மனைவியான லைலா பணக்காரராக வாழ ஆசைப்பட்டுள்ளார். இவர்களுக்கு முகமது ஷபி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முகமது ஷிபி நரபலி கொடுத்தால் பணக்காரர்களா வாழலாம் எனக் கூறியுள்ளார்.
இதனை நம்பிய அவர்கள் லாட்டரி சீட்டு விற்பனை செய்ய வந்த பெண் உள்ளிட்ட 2 பெண்களை முகமது பகவந்த்சிங் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் அங்கு வைத்து அந்த பெண்களின் கழுத்தை அறுத்து நரபலி கொடுத்துள்ளனர். அதன் பின்னர் அவர்களது உடலை துண்டு துண்டாக வெட்டி ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் புதைத்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் மூன்று பேரையும் சிறையில் அடைத்துள்ளனர். மேலும் நரபலி கொடுக்கப்பட்டு துண்டு துண்டாக வெட்டி வெவ்வேறு இடங்களில் புதைக்கப்பட்ட 2 பெண்களின் உடல்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் மாநிலத்தில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.