Categories
உலக செய்திகள்

உச்சகட்ட கொடூரம்!… சிறுமிகளை கற்பழித்து உடல்களில் முத்திரை…. ரஷ்ய வீரர்களின் வெறிச்செயல்……!!!!!

உக்ரைன் மீது சென்ற மாதம் 24ஆம் தேதி ரஷ்யா தன் ஆக்ரோஷமான தாக்குதலை தொடங்கியது. இந்த போர் தொடங்கி 6 வாரங்களுக்கு மேல் ஆகியும் இதுவரை முடிவுக்கு வரவில்லை. உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட பல்வேறு நகரங்களை கைப்பற்ற ரஷ்யா கடுமையாக போராடி வருகிறது. எனினும் உக்ரைன் படை வீரர்களும் அவர்களுக்கு இணையாக போரிட்டு வருகின்றனர். இதன் காரணமாக ரஷ்ய படைகளும் திணறி வருகிறது. இதையடுத்து கீவ் புறநகர் பகுதியான புச்சா நகரை ரஷ்ய படைகள் கைப்பற்றினார்கள்.

இந்த நிலையில் கிழக்கு, தெற்கு ஆகிய உக்ரைன் பகுதியில் ஆதிக்கம் செலுத்த ரஷ்யா முழு கவனம் செலுத்தி வருகிறது. உக்ரைன் பெண் எம்பி. லெசியா வாசிலென்க் தன் ட்விட்டர் பதிவில், ரஷ்ய வீரர்கள் 10 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், பெண்களின் உடலில்  முத்திரை குத்துவதாகவும் கூறியுள்ளார். ரஷ்ய வீரர்கள்  உக்ரைன்மக்களை  பலாத்காரம் செய்து கொலை செய்து வருகின்றனர். இதனால் ரஷ்யாவை “ஒழுக்கமற்ற குற்றங்களின் தேசம்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதாவது கொக்கி சிலுவை வடிவில் ஸ்வஸ்திகா சின்ன தீக்காயங்கள் 10 வயது சிறுமிகள் உடல்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுமிகளின்  உறுப்புகளும், மலக்குடலும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த கொடூரத்தை ரஷிய ஆண்கள் செய்தார்கள். ஆகவே ஒழுக்கக்கேடான குற்றவாளிகளின் தேசம் அது என்று தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் பாலியல் பலாத்காரம்  செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண்ணின் சித்திரவதை செய்யப்பட்ட உடல் என்று அவர்  ஒரு புகைப்படத்தையும்  வெளியிட்டுள்ளார். இதற்கிடையில் மவுனமாக  இருக்கிறேன். என் மனம் ஆத்திரத்தாலும், பயத்தாலும், வெறுப்பாலும் செயலிழந்துவிட்டது என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |