சுத்தியலால் அடித்து செக்ஸ்நடிகை கொலை செய்யப்பட்டு சடலத்தை ஒரு மாதம் ஃப்ரிட்ஜில் வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலி நாட்டின் ரெஸ்கால்டினா பகுதியில் வசித்து வருபவர் சார்லோட் ஆங்கி(26). இவர் வாசனை திரவிய கடையில் விற்பனை உற்பத்தியாளர் ஆக பணியாற்றி வந்துள்ளார். கொரோனா கால ஊரடங்கால் அந்த வாசனை திரவிய கடை மூடப்பட்டது. இந்நிலையில் தனது வேலை பறி போனதால் வேறு வழியின்றி தனது ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் இணையதளவாசிகளிடம் திடீரென பிரபலமாகியுள்ளார்.
ஆபாச பட உலகில் இவருக்கு நல்ல வருவாயும் கிடைத்தது. இந்நிலையில் கடந்த மார்ச் 11 முதல் 13 ஆம் தேதி வரை உள்ள கிளப்பில் ஆபாச டான்ஸ் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் ஆபாச நடிகையாக மாறிய சார்லோட் ஆங்கி நிகழ்ச்சிக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் போலீசிற்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர்கள் சார்லட் ஆங்கி மாயமானது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் விசாரணையில் ஆங்கியின் பக்கத்து வீட்டுக்காரர் ஃபோன்டானா (43). இவர் புகைப்பட கலைஞராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் ஆங்கிக்கும் நெருக்கமான தொடர்பு இருந்தது தெரிய வந்தது. ஒரு கால கட்டத்தில் இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதால் ஆங்கியை தீர்த்துக்கட்ட வேண்டும் என முடிவு செய்துள்ளார். அதன்படி ஆங்கியை தனது வீட்டிற்கு வர வைத்து அவரை சுத்தியால் அடித்து கொன்று அதன் பின் குளிர்சாதன பெட்டியில் அடைத்து வைத்தார்.
ஒரு மாதத்திற்கு பின் அந்த சடலத்தை துண்டு துண்டாக வெட்டி தீயில் கொளுத்தி எரித்தார். அதன்பின் எரிக்கப்பட்ட சடலத்தின் கழிவுகளை சாக்குப்பையில் போட்டு, சாலையில் தூக்கி வீசியுள்ளார். தற்போது கைது செய்யப்பட்ட ஃபோன்டானா, தான் செய்த கொலையை ஒப்புக் கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.