Categories
தேசிய செய்திகள்

உச்சகட்ட அதிர்ச்சி… ‘மகளிர் வாலிபால் அணி வீராங்கனையின் தலையை வெட்டி’… உலகையே உலுக்கும் சம்பவம்…!!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பெண் விளையாட்டு வீராங்கனையின் தலையை துண்டித்த சம்பவம் ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து அங்கு பல பயங்கரவாத சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனிடையே அமெரிக்க படைவீரர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியதும் தலிபான்கள் ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து அதிபர் அஷ்ரப் கனி நாட்டைவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதனை பயன்படுத்திய தலிபான்கள் ஆட்சி அதிகாரம் தங்கள் வசம் ஆனதாக அறிவித்து புதிய அரசையும் அமைத்துக்கொண்டனர். அன்றிலிருந்து தாலிபன்கள் அரங்கேற்றி வரும் கொடூர சம்பவங்களில் ஒன்றாக தற்போது ஆப்கானிஸ்தானின் தேசிய ஜூனியர் மகளிர் வாலிபால் அணியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரின் தலையை தலிபான்கள் துண்டித்தாக பயிற்சியாளர் ஒருவர் ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் காபூல் நகராட்சி கால்பந்து கிளப்பில் விளையாடி வந்தவர் மஹ்ஜ்பின் ஹகிமி. இவர் அந்த கிளப்பின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக இருந்தார். தொடர்ந்து இந்த விளையாட்டு வீரரின் தலை துண்டிக்கப்பட்டது குறித்து பயிற்சியாளர் அளித்த பேட்டியில் கூறியதாவது, தலிபான்கள் மஹஜ்பின் என்ற பெண் வீராங்கனையை  தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். இந்த கொலை பற்றி யாரிடமும் பேச வேண்டாம் என அவருடைய குடும்பத்தையும் அச்சுறுத்தியுள்ளனர். மேலும் ஏற்கனவேஅணியில் இருந்த இரண்டு வீரர்கள் ஆகஸ்ட் மாதத்தில் தலிபான்கள் நாட்டை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவருவதற்கு முன்பு நாட்டை விட்டு தப்பி ஓடினர். தற்போது இந்த பெண் விளையாட்டு வீரர் மட்டும் துரதிஷ்டவசமாக நாட்டில் இருந்ததால் அவரை தலிபான்கள் அடையாளம் கண்டு வேட்டையாடி உள்ளனர் என அவர் கூறினார்.

மேலும் தலிபான்கள் மகளிர் கால்பந்து அணியின் உறுப்பினர்களை தேடுவதில் அதிக ஈடுபாடு காட்டி வருவதாகவும், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு போட்டிகளில் பங்கேற்று ஊடகங்களில் தோன்றிய விளையாட்டு வீரர்களை தேடி வருவதாகவும் அவர் கூறினார். மேலும் அணியின் அனைத்து விளையாட்டு வீரர்களும் மிகவும் மோசமான சூழ்நிலையிலும் விரக்தியிலும் கடும் பயத்திலும் உள்ளனர் என அவர் கூறினார். சில நாட்களுக்கு முன்பு மஜ்ஹபின் தலை துண்டிக்கப்பட்ட புகைப்படம் மற்றும் இரத்தம் தோய்ந்த படங்கள் சமூக ஊடகங்களில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் விபா மற்றும் கத்தார் அரசு ஆப்கானிஸ்தானின் தேசிய கால்பந்து அணி உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்களை நாட்டில் இருந்து வெளியேற்றினர் என்பது நினைவுகூரத்தக்கது.

Categories

Tech |