நம்மிடமுள்ள பொருட்களில் மிகவும் அத்தியாவசியமான பொருளாக ஸ்மார்ட்போன் மாறிவிட்டது. ஏனென்றால் இந்த ஸ்மார்ட்போனில் நமக்கு தேவையான அனைத்து விஷயங்களும் இருக்கும். புகைப்படம், வீடியோக்கள், குடும்பவிபரம், வங்கிகணக்கு விவரங்கள் என பல்வேறு வசதிகள் இப்போது வரும் ஸ்மார்ட் போன்களில் கொடுக்கப்படுகிறது. அப்படிப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் திடீரென தொலைந்து போய்விட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் மக்கள் பயப்படுகின்றனர்.
ஏனெனில் ஸ்மார்ட் போன்களை தொலைப்பவர்கள் சந்திக்கும் பெரிய பிரச்சனை வங்கி கணக்கில் இருந்து பணத்தை இழப்பது தான். ஆகவே வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற செயலிகள் வழியே பணம் திருடப்படுவதை தடுக்க, போன் தொலைந்த உடனே அவற்றை உடனே பிளாக் செய்ய வேண்டும். அவற்றை பிளாக் செய்ய Gpay 18004190157 , போன் பே 08068727374, பேடி எம் 08068727374 ஆகிய எண்களுக்கு கால் செய்யலாம்.