Categories
கிரிக்கெட் விளையாட்டு

உங்க வேலைய பார்த்தா போதும்…. என்னை ஏன் இழுக்கிறீர்கள்…? கவாஸ்கருக்கு பதிலடி கொடுத்த அனுஷ்கா ஷர்மா…!!

கிங்ஸ் லெவன் பஞ்சாப் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி என்ற இரு அணியும் லீக் ஆட்டத்தின்போது  பெங்களூர் அணியின் கேப்டன் கோலி கிரீசுக்கு வந்தார்.அப்போது அவரது கிரிக்கெட் பயிற்சியை பற்றி ஐ.பி.எல் நடப்பு சீசனில் வர்ணனையாளராக செயல்பட்டு வரும்  முன்னாள் கிரிக்கெட் வீரரான சுனில் கவாஸ்கர் விமர்சனம் செய்தார் .

அதில் ஊரடங்கு காலத்தின் போது கோலி – அனுஷ்கா ஷர்மாவின் பவுலிங்கில் மட்டும்தான் பயிற்சி செய்தார்.அந்த வீடியோவை கூட நானே பார்த்திருக்கிறேன். இந்த பயிற்சி மட்டும் அவருக்கு போதாது என நினைக்கிறேன் என்று கூறினார். கவாஸ்கரின் இந்த கருத்து விராட்டின் ரசிகர்கள்  மத்தியில்  பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இதனால் கவாஸ்கரை  வர்ணனையாளர் குழுவில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை பி.சி.சி.ஐக்கு ரசிகர்கள் முன்வைத்தனர்.

இந்நிலையில்  விராட்டின் மனைவி அனுஷ்கா ஷர்மா கவாஸ்கர்ரிடம் அவரது விமர்சனம்  குறித்து சாடி உள்ளார்.இது குறித்து அனுஷ்கா ஷர்மா கூறுகையில் ” கவாஸ்கர் அவர்களே ஆட்டத்தைப் பற்றி மட்டும் விமர்சித்தால் போதுமானது, அதில் என்னை ஏன் இழுக்கிறீர்கள்.கணவரின் ஆட்டத்திற்கு மனைவி  எப்படி குற்றவாளியாக முடியும். ஆட்டத்தைப் பற்றி நீங்கள் விமர்சிக்கும் போது ஒரு கிரிக்கெட் வீரரின் தனிப்பட்ட வாழ்க்கையை எதற்காக  சம்பந்தப்படுத்திகிறீர்கள் என்று கூறி கவாஸ்கருக்கு சரியான பதிலடி கொடுத்து உள்ளார்.

Categories

Tech |