Categories
பல்சுவை

“உங்க வீட்டு ஃப்ரிட்ஜ், மிக்ஸி, கிரைண்டர்”….. எப்பவும் பளபளப்பா இருக்கணுமா?…. என்ன செய்யலாம் எளிய குறிப்பு இதோ ….!!!!

வீட்டில் இருக்கின்ற எலக்ட்ரானிக் பொருட்களை சரியாக பராமரித்து அவற்றை நீண்ட காலத்திற்கு நாம் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். அதற்கான சில டிப்ஸ்களை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்துகொள்வோம்.

எலக்ட்ரானிக் பொருட்களை பொருத்த வரையில் சரியான முறையான பராமரிப்பு என்பது அவசியம். இல்லையெனில் வாரண்டிக்கு முன்பாகவே பழுதாகிவிடும், சில சமயங்களில் வாரண்டி கடந்து பல வருடங்கள் நன்றாக இருக்கும். ஆனாலும் அவை சீராக இருக்கும். இன்னும் சில சாதனங்கள் பழுது இருக்காது. ஆனால் அவை அதிக மின் கட்டணத்தை உண்டாக்க செய்யும். குறிப்பாக சமையலறையில் இருக்கும் பொருள்களை எப்படி பராமரிப்பது என தெரிந்துகொள்ள வேண்டும்.

முழு நேரமும் இயங்கிக்கொண்டிருக்கும் பொருள் என்றால் அது பிரிட்ஜ் தான். பொதுவாக ப்ரிட்ஜுக்குள் எல்லா பொருட்களையும் திணிக்காமல் தேவையான பொருட்களை மட்டும் வைத்திருந்தால் மின்கட்டணம் அதிகரிக்காது. மேலும் உடல் ஆரோக்கியமும் குறையாமல் பாதுகாக்கப்படும்.

கிலாஸ் டாப் ஸ்டவ் அடுப்பு மீது பெரும்பாலும் எண்ணெய், கிறீஸ் பொருட்கள் இருக்கும். நவீன கால அடுப்புகளை சுத்தப்படுத்தும் போது சில வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இதனை வேகமாக சுத்தம் செய்தால் கீறல்கள் உண்டாகும். அதனால் மென்மையாக சுத்தம் செய்ய வேண்டும். வினிகர் கலந்த சோப்பு அல்லது தண்ணீரை அடுப்பின் மீது ஸ்பிரே செய்து சில நேரம் விட்டு மென்மையாக துணியை வைத்து துடைத்து எடுத்தால் அழுக்குகள் சென்றுவிடும்.

அழுக்குகள் அதிகமாக இருந்தால் பேக்கிங் சோடாவை நீரில் கலந்து கறை படிந்த இடத்தில் தடவி சில நிமிடங்கள் கழித்து தேய்த்தாலும் அழுக்குகள் போய் விடும். மிக்ஸி கிரைண்டர் போன்றவற்றில் கறை படிந்தால் அல்லது துர்நாற்றம் வீசுவதாக இருந்தால் உடனடியாக கவனிக்க வேண்டும். ஏனெனில் ஆரோக்கியமான உணவு முறையில் அதன் தயாரிப்பும் மிகவும் அவசியம். மிக்ஸியை சுத்தம் செய்ய பல வழிமுறைகள் உண்டு. எளிமையான வழிமுறை என்றால் பேக்கிங் பவுடர் தான். சமையலறை உபகரணங்கள் அனைத்துக்கும் இதை பயன்படுத்தலாம்.

1 டீஸ்பூன் பேக்கிங் பவுடர் எடுத்து அதில் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் ஆக்கிக் கொள்ள வேண்டும். இதனை மிகவும் அழுக்கு உள்ள இடத்தில் முழுவதும் தடவி விடவும் 20 நிமிடங்கள் கழித்து அலசி எடுத்தால் மிக்ஸி ஜார் பளபளப்பாக இருக்கும் .கிரைண்டர் மாவு அரைக்கும்போது மாவு சுத்தமாக இல்லாமல் கழுவினாலும் எப்படியாவது சில இடுக்குகளில் மாவு தேங்கிவிடும். இது நாளடைவில் அப்படியே உலர்ந்து பூச்சியை உண்டாக்கும்.  கிரைண்டரை மாதம் ஒரு முறையாவது முழுமையாக சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.

கிரைண்டரை சுத்தம் செய்ய ஐடோப்ரோபைல் பயன்படுத்தலாம். இது பூச்சிகளைக் கொல்லும் ஆற்றல் கொண்டது. இப்படி சில பொருள்களை வைத்து நம் வீட்டில் உள்ள எலக்ட்ரானிக் பொருட்களை நாம் சுத்தமாக வைத்துக் கொண்டால் மிகவும் நல்லது.

Categories

Tech |