உங்கள் வீட்டில் இருக்கக் கூடிய செடிகளுக்கு நீங்களாகவே இயற்கை உரம் தயாரிக்கலாம். அதற்கு முன்பு உங்கள் வீட்டிலுள்ள செடிகளின் ஆரம்பநிலை எந்தக் கட்டத்தில் இருக்கின்றது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். வீட்டில் மாடித் தோட்டம் போடுபவர்கள் வீட்டில் இருக்கக் கூடிய சிறிய இடத்தில் தொட்டியில் காய்கறிச் செடிகளை வைத்து பராமரித்து வருவார்கள். அதிலும் ஒரு சிலர் மொட்டை மாடியில் ஒரு கார்டன் போல அமைத்து அங்கு பழங்கள், காய்கறிகள் மற்றும் தொட்டியில் பயிரிட்டு செடிகளை வளர்ப்பார்கள். எப்படி செடிகளை வளர்த்தாலும் அதில் பூச்சி அழிப்பதே நடக்கக்கூடிய ஒன்றுதான்.
இதனை தவிர்ப்பதற்கு நாம் செடி வைக்கும் போதே சரியான மண்ணை பயன்படுத்த வேண்டும். அதற்கு வெறும் மண்ணை மட்டும் எடுக்க கூடாது. இது அதிக எடை கொண்டிருப்பதால் தொட்டியின் கணம் அதிகமாகவே இருக்கும். அதிலும் குறிப்பாக மாடித்தோட்டம் போடுபவர்கள் வெறும் எண்ணெய் மட்டும் பயன்படுத்தவே கூடாது. ஒரு செடியை வைக்கும்போதே நான்கில் ஒரு பங்கு மண், ஒரு பங்கு கோகோ பீட் என்று சொல்லக்கூடிய தேங்காய் நார் துகள்கள்,ஒரு பங்கு மக்கிய உரம் மற்றும் ஒரு பங்கு ஆற்று மண் என்ற நான்கையும் சம அளவு கலந்து வைக்க வேண்டும். அதைப் பயன்படுத்தக் கூடிய தேங்காய் நார் துகள்களை இரண்டு முறை நீரில் நன்றாக கழுவி பயன்படுத்த வேண்டும்.
ஒரு செடியை வைப்பதற்கு எப்போதும் செம்மண் சிறந்தது என்றாலும் அந்த மண் கிடைக்காத நிலையில் மண்ணை வளப்படுத்த சில முறைகளை நாம் கடைபிடிக்க வேண்டும். எந்த மண்ணை பயன்படுத்தினாலும் அதில் உள்ள பெரிய கற்களை அகற்றும் முறை சுத்தம் செய்து அதன் பிறகு பயன்படுத்த வேண்டும். பிறகு செடியை வைக்கும் போது மண்ணில் வேப்ப எண்ணெய் அல்லது வேப்பம் புண்ணாக்கு பொடியை கலந்து விட்டாள் விதைகள் அல்லது வேறு நன்றாக பற்றிக் கொள்ளும். மண்ணுக்கு சமமாக மணலும் சேர்த்துக் கொள்ளலாம்.
இல்லை என்றால் இதே வேர்ப்பகுதியை இறுக்கி கட்டியாக்கிவிடும். சிறிதுசிறிதாக செடிகளை வளர்க்க தொடங்கவேண்டும். அப்போதுதான் எல்லாவற்றையும் கவனமாக நாம் பராமரிக்க முடியும். இந்த குறிப்புகளை எல்லாம் கவனமாக கடைப்பிடித்தால் செடிகள் அருமையாக வளர்ந்து, காய்களும், பழங்களும், பூக்களும் நிறைவாக கொடுக்கும். அதோடு பூச்சிகளும் செடிகளை பற்றாமல் இருக்கும்.
இதனைத் தவிர உரத்த இயற்கையாக வீட்டிலேயே தயார் செய்யலாம். அமுதக்கரைசல் மிகவும் பிரபலமான கரைசல். இதனை நீங்கள் எளிதாக தயாரிக்க முடியும்.
தேவையான பொருள்கள்:
தண்ணீர் – 10 லிட்டர்
பசுமாட்டு சாணம் – ஒரு கிலோ
பசுவின் கோமியம் – ஒரு லிட்டர்
நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் – 100 கிராம்
முதலில் ஒரு மண் பானையை எடுத்துக் கொண்டு அதில் இவை அனைத்தையும் சேர்த்து பெரிய மரக்கரண்டி அல்லது நீளமான குச்சி கொண்டு நன்றாக கலக்கவும். 50 முறை இடது பக்கமும் 50 முறை வலது பக்கமும் சுற்ற வேண்டும்.அதன் பிறகு மூன்று மணி நேரம் கழித்து மீண்டும் இதே போல இரண்டு பக்கமும் கலந்துவிட வேண்டும். தினமும் மூன்று வேளை இரண்டு நாள் இப்படி தொடர்ந்து செய்ய வேண்டும்.
பிறகு அமுதக் கரைசல் தயாராகிவிடும். இந்தக் கரைசலை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து செடிகளுக்கு தெளிக்க வேண்டும். ஒரே வாரத்தில் செடிகள் அனைத்தும் பசுமையாக தழைத்து வளரும். இந்த அமிர்த கரைசலை செடிகளின் மீது தெளிக்கும்போது கீரைகள், கொத்தமல்லி மற்றும் புதினா போன்றவை நன்றாக வளரும். வீட்டில் பெரிய அளவு செடிகள் அதிகம் இல்லை இந்த அமிலக் கரைசலை குறிப்பிட்ட அளவு செய்து அதனை நீங்கள் பயன்படுத்தலாம்.