சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் குமார், நயன்தாரா, விவேக், அனிகா உள்ளிட்டோர் நடித்த விஸ்வாசம் படம் 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 10ம் தேதி தியேட்டர்களில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அந்த படம் வெளியாகி இன்றுடன் 3 ஆண்டுகள் ஆகிவிட்டது.இதையடுத்து டைரக்டர் சிறுத்தை சிவா #Viswasam என்கிற ஹேஷ்டேகுடன் அந்த படம் பற்றி ட்வீட் செய்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி விஸ்வாசம் படம் வெளியாகி எனக்கு மகிழ்ச்சி அளித்தன. எனக்கும், என் குழுவுக்கும் சிறந்த ஆசிர்வாதமாக அமைந்தது. நன்றி அஜித் சார். அஜித் சார் ரசிகர்கள், மீடியா நண்பர்கள், சினிமா ரசிகர்கள், குடும்ப ஆடியன்ஸ், விஜயா ப்ரொடக்ஷன், சத்யஜோதி பிலிம்ஸ், மொத்த படக்குழுவுக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார். சிவாவின் ட்வீட்டை பார்த்த ரசிகர்களோ, அடுத்த பட அறிவிப்பு எப்பொழுது என்று கேட்டுள்ளனர்.ரஜினியை வைத்து சிவா இயக்கிய அண்ணாத்த படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியானது. இதையடுத்து மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்க ரஜினி ஆவலாக இருக்கிறார் என கிசுகிசுக்கப்படுகிறது.