Categories
தேசிய செய்திகள்

உங்க லக்கேஜ் தொலைந்துவிட்டதா?… இனி கவலையை விடுங்க…. ரயில் பயணிகளுக்கு முக்கிய தகவல்…..!!!!

ரயில் பயணிகளுக்கு ஏதேனும் உடைமைகள் மற்றும் பொருட்கள் திருடப்பட்டுவிட்டால் இனிமேல் கவலை கொள்ள வேண்டாம். ஏனெனில் ஓடும் ரயில் (அ) ரயில் நிலையத்தில் இருந்து உங்களது பொருட்கள் திருடப்பட்டால், இழப்பீடு கோருவதற்கு பயணிகள் பின்பற்ற வேண்டிய பல விதிகள் இருக்கிறது. அதாவது, ரயில்வே வழங்கிய விதிகளின் அடிப்படையில் திருடப்பட்ட லக்கேஜின் மதிப்பை தீர்மானித்த பின், அதற்குரிய இழப்பீடு பயணிகளுக்கு வழங்க இந்திய ரயில்வே பொறுப்பாகும். லக்கேஜ் திருட்டுபோனால் பயணிகள் ரயில் நடத்துனர், கோச் உதவியாளர், காவலர் (அ) ஜிஆர்பி எஸ்கார்ட்களை அணுகலாம்.

இதையடுத்து அவர்கள் உங்களுக்கு FIR படிவத்தை கொடுப்பார்கள். அதனை நீங்கள் சரியாக பூர்த்திசெய்து அவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின் புகாரை பெற்றுக்கொண்டு போலீஸ் நிலையத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேசமயத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை, ஆபரேஷன் அமனாட்டின் கீழ் பயணிகள் தங்களது தொலைந்த லக்கேஜ்களை எளிதாக திரும்பப்பெறுவதற்கான பிரச்சாரத்தைத் துவங்கியுள்ளது. அந்தந்த பிரிவுகளின் RPF பணியாளர்கள் தொலைந்த லக்கேஜின் தகவலை தங்களது ரயில்வே மண்டலத்தின் இணையதளத்தில் பதிவேற்றுகின்றனர். அத்துடன் நீங்கள் தொலைத்தப் பொருட்களின் விலையை கணக்கீடு செய்து ரயில்வே வாரியமானது உங்களுக்கு அந்த இழப்பீடு தொகையை வழங்கும்.

Categories

Tech |