Categories
சினிமா தமிழ் சினிமா

உங்க ரெக்கார்டு வேற லெவல்… பர்ஃபெக்ட்டா இருக்கீங்க சார்… பைலை பார்த்து மெர்சலாகிய ஐடி டிபார்ட்மெண்ட்…!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். போலீஸ் கெட்டப் என்றால் நடிகர் விஜயகாந்த்க்கு அப்படி ஒரு அம்சமாக இருக்கும். இவர் தன்னுடைய அபாரமான நடிப்பின் மூலமாக பல ரசிகர்களை தன் வசப்படுத்தினார். இவர் படங்களில் நடித்துக் கொண்டிருந்த போது அரசியலில் நுழைந்தார். அரசியலில் படிப்படியாக வளர்ந்து வந்தார். ஆனால் தற்போது  உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த் தற்போதெல்லாம் வீட்டை  விட்டு வெளியே வருவதே கிடையாது. இவரை காண்பதே மிகவும் அரிதான ஒன்றாக மாறிவிட்டது என்று ரசிகர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இருப்பினும் விஜயகாந்த் அரசியல் நடவடிக்கைகளை கவனித்துதான் வருகிறார்.

நடிகர் விஜயகாந்த் நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த போது பல்வேறு நபர்களுக்கு உதவி செய்துள்ளார். இந்நிலையில் நடிகர் விஜயகாந்த் சினிமாவில் வளர்ந்து வந்த சமயத்தில் திடீரென அவர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். காலை 9 மணிக்கு ஆரம்பித்த ரெய்டு இரவு 10 மணி வரை நீடித்துள்ளது. அதன்பின் தலைமை அதிகாரி ராபர்ட்  அங்கிருந்து கிளம்பும் போது ஒரு விஷயத்தை கூறிவிட்டு சென்றுள்ளார். அதாவது உங்கள் வீட்டில் இருந்த ஆவணங்களை பார்த்தபோது தான் நீங்கள் எவ்வளவு நல்லது செய்துள்ளீர்கள் என்பது தெரிகிறது. இதை நிறுத்தி விடாமல் அப்படியே தொடருங்கள் என்று நெகிழ்ச்சியான கருத்தை கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |