Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உங்க ரூபாய் ரோட்டுல விழுது…. நேக்காக ரூ.3 லட்சம் அபேஸ்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

ரூபாய் நோட்டுகளை ரோட்டில் சிதறவிட்டு ரூ.3 லட்சம் திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஓ.எம்.ஆர் பகுதியில் வசித்து வருபவர் செந்தில்குமார். கல்லூரி பேராசிரியரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் சாலையில் அருகே உள்ள வங்கிக்கு பணம் எடுக்க சென்று உள்ளார். அவர் வங்கிக் கணக்கிலிருந்து ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரம் பணம் எடுத்து அதனை மோட்டார்சைக்கிள் முன்பகுதியில் உள்ள பெட்ரோல் டேங்க் கவரில் வைத்துக் கொண்டு சென்றுள்ளார்.

இவர் பணத்தை பெட்ரோல் டேங்க் கவரில் வைப்பதைப் பார்த்த இரண்டு நபர்கள் அவருடைய மோட்டார் சைக்கிளுக்கு பின்னால் சென்றுள்ளனர். பின்னர் செந்தில்குமார் வண்டிக்கு முன்னால் சென்றவர்கள் உங்கள் பணம் கீழே விழுந்துள்ளது என கூறியுள்ளனர். இதனை நம்பிய அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பின்னால் பார்த்துள்ளார் அப்போது அந்த நபர்கள் பெட்ரோல் டேங்க் கவரில் வைத்திருந்த பணத்தை திருடிக்கொண்டு சென்று விட்டனர்.

பணத்தை திருடிச்சென்ற நபர்களால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அவர் இச்சம்பவம் பற்றி காவல்துறையினருக்கு புகார்  கொடுத்தார். அந்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அப்போது திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் வசித்து வரும் விஜயகுமார், மாறி ஆகிய இருவரும் ரூபாய் நோட்டுகளை சிதறவிட்டு பேராசிரியர் கவனத்தை திசைதிருப்பி பணத்தை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை  காவல்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை செய்தனர். அப்போது திண்டுக்கல் சாலை ரோட்டில் கடந்த ஆண்டு வீரைய்யா என்பவரிடம் இதே பாணியில் ரூ.50 ஆயிரம் அபேஸ் செய்ததை ஒப்புகொண்டனர்.

Categories

Tech |