இந்திய ரயில்வே தன் பயணிகளின் நலன் கருதி பல வகையான வசதிகளை வழங்கி வருகிறது. எனினும் ரயில்வேதுறை வழங்கும் அனைத்துவித வசதிகள் பற்றி பயணிகளுக்கு பெரிதாக தெரிவதில்லை. இப்போது பயணிகள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய வசதியை பற்றி இங்கு தெரிந்துகொள்வோம். அந்த முக்கியமான வசதி என்னவெனில் ரயில் பயணிகள் தங்கள் டிக்கெட்டுகளை தொலைத்து விட்டால் ரயிலில் எப்படி பயணம் மேற்கொள்ளலாம் என்பது பற்றிதான் பார்க்க போகிறோம். ரயிலில் பயணம் செய்யும்போது (அ) பயணத்திற்கு முன்பு சிலர் கவனக்குறைவு காரணமாக தங்களது டிக்கெட்டுகளை தவறவிடுகின்றனர்.
அவ்வாறு டிக்கெட்டுகளை தொலைத்து விட்டால் ரயிலில் பயணம் மேற்கொள்ள முடியாது என்ற பயம் பல பேருக்கும் தோன்றுகிறது. எனினும் இனி அதைப்பற்றி கவலைப்பட வேண்டிய தேவையில்லை. உங்களது உண்மையான ரயில் டிக்கெட் தொலைந்து போய்விட்டால் நீங்கள் டூப்ளிகேட் ரயில்டிக்கெட் பெற்று ரயிலில் பயணம் மேற்கொள்ளலாம். எனினும் இதனை பெற நீங்கள் அதிகளவு பணம் செலுத்தவேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இந்திய ரயில்வேயின் அதிகாரபூர்வமான தளமான indianrail.gov.inன் படி, ரிசர்வேஷன் சார்ட்டை தயார் செய்வதற்கு முன் உறுதிப்படுத்தப்பட்ட ஆர்ஏசி டிக்கெட் காணவில்லை எனப் புகாரளிக்க வேண்டும். இதையடுத்து நீங்கள் கட்டணம் செலுத்தி டூப்ளிகேட் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். 2ஆம் வகுப்பு மற்றும் ஸ்லீப்பர் வகுப்புக்கு டூப்ளிகேட் டிக்கெட் பெற ரூபாய்.50 செலுத்தியும், மீதம் உள்ள 2ஆம் வகுப்பிற்கு ரூபாய்.100 செலுத்தியும் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.
டூப்ளிகேட் டிக்கெட்டை பெறுவதற்கு முன் நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை என்னென்ன?…
# ரிசர்வேஷன் சார்ட்டை தயார் செய்வதற்கு முன்பாக நீங்கள் விண்ணப்பித்தால், இழந்த டிக்கெட்டுக்கும் அதேகட்டணங்கள் பொருந்தும்.
# இதனிடையில் வெயிட்டிங்லிஸ்டில் இருப்பவர்களுக்கு டூப்ளிகேட் டிக்கெட்டுகள் வழங்கப்படாது.
# விபரங்களின் அடிப்படையில் டிக்கெட்டின் உண்மைத் தன்மை மற்றும் நம்பகத் தன்மை சரிபார்க்கப்பட்டால், சிதைக்கப்பட்ட, முடக்கப்பட்ட டிக்கெட்டுகளிலும் பணத்தைத் திரும்பப் பெறலாம்.
# ஆர்ஏசி டிக்கெட்டுகளில் ரிசர்வேஷன் சார்ட்டை தயாரித்த பின் டூப்ளிகேட் டிக்கெட் எதுவும் வழங்கப்படாது.
# டூப்ளிகேட் டிக்கெட் கொடுக்கபட்ட பின் ஒரிஜினல் டிக்கெட்டையும் பெற்று, 2 டிக்கெட்டுகளையும் ரயில் புறப்படுவதற்கு முன்னதாக ரயில்வேயிடம் காண்பித்தால், டூப்ளிகேட் டிக்கெட்டுக்கான கட்டணம் 5 சதவீதம் திரும்ப வழங்கப்படும்.