இன்றைய காலகட்டத்தில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல பெரும்பாலானோர் ரயில் பயணத்தை மேற்கொள்கின்றனர். ரயில்களில் டிக்கெட் கட்டணம் குறைவு என்பது மட்டுமல்லாமல் விரைவாகவும் சரியாகவும் பயணிக்க முடியும். அதனால் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர். அதன்படி ரயில் டிக்கெட் புக்கிங் செய்வதற்கு நிறைய வழிமுறைகள் உள்ளது. டிக்கெட் கவுண்டரில் பயணிகள் நேரடியாக புக்கிங் செய்யலாம். மொபைல் ஆப் அல்லது ஆன்லைன் மூலமாகவும் முன்பதிவு செய்ய முடியும். பெரும்பாலானோர் ஆன்லைன் புக்கிங் மற்றும் மொபைல் மூலமாகவே டிக்கெட் பெறுகிறார்கள்.
அதில் டிக்கெட் பிரிண்ட் கையில் வைத்துக் கொண்டு அலைய வேண்டிய அவசியமில்லை. மொபைல் போன் மூலமாக டிக்கெட்டை காற்றில் பயணிக்கலாம். ஆனால் நேரடியாக டிக்கெட் புக்கிங் செய்தவர்கள் கட்டாயம் டிக்கெட்டை கையில் வைத்திருக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் ரயிலில் பயணம் தொடங்குவதற்கு முன்பே டிக்கெட் தொலைந்துவிட்டால்? நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை. அப்படி தொலைந்து போன டிக்கெட்டை மீண்டும் வாங்கும் வசதி உள்ளது.
ஆனால் அதற்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டும். இந்திய ரயில்வே விதிமுறைகளின்படி கன்ஃபார்ம் டிக்கெட் அல்லது RAC டிக்கெட் பயணத்திற்கு முன்பாக தொலைந்துவிட்டால் அதற்கு பதிலாக டூப்ளிகேட் டிக்கெட் உங்களுக்கு வழங்கப்படும். ஆனால் அதற்கு நீங்கள் அபராதம் செலுத்த வேண்டும். ரயில் பயணம் தொடங்குவதற்கு முன்பாக டிக்கெட் தொலைந்து போனால் அதற்கு அபராதமாக 50 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை செலுத்த வேண்டும்.
ஒருவேளை பயணம் மேற்கொள்ளும் போது டிக்கெட் தொலைந்து போனால் டிக்கெட் கட்டணத்தில் 50 சதவீதம் வரை வசூல் செய்யப்படும். ஒருவேளை அபராதம் செலுத்தி டுப்ளிகேட் டிக்கெட் வாங்கிய பிறகு தொலைந்து போன உங்கள் டிக்கெட் கிடைத்தால்,நீங்கள் இரண்டு டிக்கெட்டையும் கொடுத்து அபராதம் செலுத்திய தொகையை திரும்ப வாங்கிக் கொள்ளலாம். இருந்தாலும் பிரிப்ரண்ட் தொகையில் 5 சதவீதம் வரை அல்லது 20 ரூபாய் வரை பிடித்தம் செய்யப்படும்.