ஒவ்வொருவருக்கும் வயதாகும்போது இளமை இழப்பது மட்டுமல்லாமல் முடியும் வெள்ளை நிறத்தில் மாறிவிடும். ஆனால் முன்கூட்டியே சிலருக்கு முடி நிற இழப்பு ஏற்படும். இதனை முன்னரே தடுப்பதற்கு சில தடுப்பு முறைகள் உள்ளன. அதனை இந்த பதிவில் பார்க்கலாம்.
நெல்லி எண்ணெய்:
நெல்லிக்கனியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி உலர்த்த வேண்டும். இதனை தேங்காய் எண்ணெயில் சேர்த்து கருப்பாக மாறும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு எண்ணெயில் சேர்த்து இந்த எண்ணெயை தினமும் தடவி வரவும். அதனைப் போலவே நெல்லிக்காய் பொடியை எடுத்து இரவில் தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் தலைமுடியை கழுவிய பிறகே இந்த தண்ணீரை கொண்டு கழுவ வேண்டும். அப்படி செய்தால் முடி கருப்பாக மாறும்.
தண்டுக்கீரை:
சாம்பல் நிறத்தில் இருக்கும் முடியை கருமை நிறத்திற்கு மாற்ற பயனுள்ள வைத்தியம் தண்டுக்கீரை. இந்த கீரையின் இலைகளை நன்றாக மசித்து புதிய சாட்டை பயன்படுத்துவதன் மூலமாக தலை முடி நிறம் நரைப்பதை தடுக்க முடியும். இது முடி வளர்ச்சியை அதிகரிப்பது மட்டுமல்லாமல் வெண்மையாகவும் வைக்க உதவுகிறது.
மசாஜ் கலவை:
பாதாம் எண்ணெய், எலுமிச்சைச் சாறு மற்றும் இந்திய நெல்லிக்காய் சாறு தலா ஒரு டீஸ்பூன் கலந்து ஒன்றாக சேர்த்து தூங்குவதற்கு முன்பு உச்சந்தலையில் வைத்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.
கருவேப்பிலை எண்ணெய்:
பொதுவாக இது அனைவருமே அறிந்ததுதான். முடியின் நிறம் கருப்பாக இருக்க மருத்துவர்கள் அதிக அளவு பரிந்துரை செய்வது கருவேப்பிலைஎ ண்ணெய் தான். தேங்காய் எண்ணெயில் கருவேப்பிலையை சேர்த்து காய்ச்சி சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். அந்த எண்ணெயை தினமும் தடவி வந்தால் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
பசு வெண்ணைய்:
முடியின் நிறம் அடர்த்தியாக கருகருவென்று இருப்பதற்கு பசும்பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட புதிய வெண்ணையை கூந்தலில் தடவி நன்றாக மசாஜ் செய்யலாம். வாரத்தில் இரண்டு நாட்கள் இவ்வாறு செய்து வந்தால் முன்கூட்டியே முடி நரைப்பதை தடுக்க முடியும்.
பீர்க்கங்காய்:
இது மிகவும் பிரபலமான ஒன்று. பீர்க்கங்காயை சிறு சிறு துண்டுகளாக வெட்டி நிழலில் வைத்து உலர்த்தி எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த காய்ந்த துண்டுகளை தேங்காய் எண்ணெய் மூன்று பங்கு எடுத்து இரண்டு பங்கு நல்லெண்ணெய் சேர்த்து கலந்து மூன்று அல்லது நான்கு நாட்கள் வரை நன்றாக ஊற வைக்க வேண்டும். அதன்பிறகு பீர்க்கங்காய் துண்டுகள் எண்ணெயில் கருப்பாக மாறும் வரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அடுத்து எண்ணையை அறை வெப்பநிலையில் குளிர வைக்க வேண்டும். அதை தினமும் உச்சந்தலையில் வைத்து மசாஜ் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் முடி நிறம் மாறாமல் அப்படியே இருக்கும். இதனைத் தொடர்ந்து பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.