Categories
பல்சுவை

உங்க முகம் பளபளப்பாக, பொலிவுடன் இருக்க… இதோ இயற்கையான எளிய டிப்ஸ்….!!!!

நம்முடைய தர்மம் வெளிப்புறத்தில் மட்டுமல்லாமல் உட்புறத்திலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஊட்டச்சத்து போன்ற உட்புற காரணிகளால் நமது சருமம் பெருமளவு பாதிக்கப்படுகிறது. நம்முடைய சர்மா அமைப்பை மேம்படுத்த உதவும் சில வீட்டு வைத்திய முறைகளை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

தேன்:

பொதுவாக தேனில் கிருமி நாசினிகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளது. இது முகப்பருவினால் பாதிக்கப்பட்ட சருமத்திற்கு ஒரு நல்ல நிவாரணியாக அமைகின்றது. இதில் ஈரத்தன்மை அதிக அளவில் நிறைந்திருப்பதால் சருமத்தை நீரோட்டமாக வைத்திருக்கும்.சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை அவற்றை மென்மையாகவும் பளபளப்பாகவும் வைத்துக்கொள்ள இது பெரிதும் உதவுகிறது. எனவே சிறிது சுத்தமான தேனை உங்களது முகத்தில் தடவி 10 நிமிடம் அப்படியே விட்டு விட வேண்டும்.

அதன் பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் சருமம் நிறமாகவும் மென்மையாகவும் இருப்பதை உங்களால் உணர முடியும். மேலும் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு, ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலந்து அதனை ஃபேஸ் பேக் மாதிரி முகத்தில் பயன்படுத்தலாம். இதனை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பூசிக்கொண்டு சுமார் 20 நிமிடம் அப்படியே விட்டு விட வேண்டும். அதன் பிறகு மிதமான நீரில் முகத்தை கழுவினால் முக ஆரோக்கியத்தை பேணிக் காக்கலாம்.

எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரை:

எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரை நமது சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இதில் வைட்டமின் சி அதிக அளவில் நிறைந்துள்ளதால் சருமம் பளபளப்பாக இருக்கும். சிறிதளவு எலுமிச்சைச் சாறு,இரண்டு தேக்கரண்டி சர்க்கரையை எடுத்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அதனை முகத்தில் தடவி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். அதன் பிறகு முகத்தை மிதமான நீரில் கழுவ வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறை இவ்வாறு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும் .

கற்றாழை, மஞ்சள் மற்றும் கடலை மாவு:

சருமத்தை பராமரிப்பதற்கும் கூந்தலைப் பராமரிப்பதற்கு கற்றாழை ஒரு சிறந்த இயற்கை மருந்து. இது சரும பிரச்சனைகளுக்கு இயற்கையான முறையில் சிகிச்சை அளிக்க பெரிதும் உதவுகிறது. இதில் பாக்டீரியா எதிர்ப்பு குணங்கள் அதிகளவு உள்ளதால் சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்க உதவுகின்றது. ஒரு பாத்திரத்தில் சிறிதளவு கடலைமாவு, ஒரு தேக்கரண்டி மஞ்சள் மற்றும் இரண்டு தேக்கரண்டி கற்றாழை ஜெல் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பேஸ்ட் போல தயார் செய்து கொள்ள வேண்டும். அதனை உங்கள் சருமத்தில் தடவி குறைந்தது 20 நிமிடங்களுக்கு ஊற விட வேண்டும். அதன் பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.

தேங்காய் எண்ணெய்:

தேங்காய் எண்ணெயில் பொதுவாக அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளது. இது சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது வைத்துக் கொள்ள உதவும்.ஒரு பாத்திரத்தில் 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணையை எடுத்து அதனை சிறிதளவு சூடாக்கி எடுத்துக் கொள்ள. அதை முகத்தில் பூசி மெதுவாக வட்ட வடிவில் மசாஜ் செய்யவும்.இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டு காலையில் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும் . தினமும் இப்படி செய்து வந்தால் சருமம் பளபளப்பாகவும் பொலிவுடனும் இருக்கும்.

Categories

Tech |