Categories
மாநில செய்திகள்

உங்க மாவட்டத்தில் கஞ்சா விற்பனையா….? உடனே இந்த எண்ணுக்கு….. புகார் அளிக்கலாம்….!!!!

தமிழகத்தில் சமீபகாலமாக பள்ளி மாணவர்கள் மது அருந்துவது, புகைபிடிப்பது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், தற்போது 2 அரசு பள்ளி மாணவர்கள் பட்டப்பகலில் மது அருந்திவிட்டு. நடுரோட்டில் தள்ளாடும் சம்பவம் பார்க்கும்போதே அதிர்ச்சியாக உள்ளது. பள்ளிகளில் மாணவர்கள் குறிப்பிட்ட சில குழுக்களால் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் பள்ளி, கல்லூரி வளாகப் பகுதிகளில் கஞ்சா விற்பனை, பயன்பாடு குறித்து தகவல் அளிக்க புகார் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அளிப்பவர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை அளிக்க வேண்டுமென்ற அவசியமில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. இதன்படி மதுரை 9498181206, விருதுநகர் 9443967578, திண்டுக்கல் 8225852544, தேனி 9344014104, ராமநாதபுரம் 8300031100, சிவகங்கை 8608600100, நெல்லை 9952740740, தென்காசி 9385678039 என்ற எண்களில் புகார் அளிக்கலாம்.

Categories

Tech |