Categories
Tech டெக்னாலஜி

உங்க போனில் இப்படி வருகிறதா?…. தயவு செய்து ஓபன் செய்யாதீங்க…. BIG WARNING….!!!!

இன்றைய காலகட்டத்தில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.அதேசமயம் தொழில்நுட்பம் வளர வளர அதன் மூலம் ஏற்படும் ஆபத்துகளும் அதிகரித்து வருகின்றன. அதாவது புதிதாக வைரஸ்களை உருவாக்கி பரப்புவது போன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. அவ்வகையில் சோவா என்ற புதிய வைரஸ் மூலம் ஆண்ட்ராய்டு போன்களில் வங்கி கணக்குகள் ஹேக் செய்ய வாய்ப்பு இருப்பதாக கனரா வங்கி, எஸ்பிஐ வங்கி, பி என் பி தங்கள் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

போலி எஸ் எம் எஸ் மூலமாக இந்த வைரஸ் போன்களுக்கு அனுப்பப்படுகிறது. எனவே சந்தேகத்திற்கிடமான எந்த ஒரு லிங்குகளையும் , செயலிகளையும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம். இந்த வைரஸ் உள்ளே நுழைந்து விட்டால் நமது அனைத்து தகவல்களும் ஹேக் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |