உத்தரபிரதேச மாநிலத்தில் திருமணமான இரண்டு மாதங்கள் பிறகு தனது மனைவி ஒரு திருநங்கை என்று தெரிந்ததும் கணவன் மனைவி குடும்பத்தின் மீது புகார் அளித்துள்ளார்.
உத்திரப்பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டம்,சாஸ்திரி நகரை சேர்ந்த நபர் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். வழக்கம்போல் இருவரும் திருமணம் முடிந்து நன்றாகவே இருந்து வந்துள்ளன. ஆனால் திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவி சேர்ந்து இருக்க முயன்றபோது, மனைவி பல காரணங்களை கூறி ஒவ்வொரு முறையும் ஒதுங்கி சென்றுள்ளார்.
இதையடுத்து மருத்துவரை அணுகி உடல்நலன் குறித்து பரிசோதனை செய்து பார்த்த போது, அந்த பெண் ஒரு திருநங்கை என்பது தெரியவந்தது. இதை மருத்துவர்கள் கணவரிடம் கூறவே மிகவும் அதிர்ச்சி அடைந்த அவர், மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது காவல்துறையிடம் புகார் அளித்தார். அவரது குடும்பத்தினர் மீது 420 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.