கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா பயணிகள் சுவிட்சர்லாந்திற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் கொரோனா பாதிப்புக்கான அபாயம் அதிகமாக உள்ளதால் இந்நாட்டின் சுற்றுலாபயணிகள் இனிமேல் சுவிட்சர்லாந்துக்கு பயணம் செய்ய முடியாது என்று கூறியுள்ளது. இந்த எதிர்பாராத திடீர் அறிவிப்பினால் சுற்றுலா பயணிகள் தங்களது விடுமுறையை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஸ்விட்சர்லாந்து, பிரிட்டன் சுற்றுலா பயணிகளை கொரோனோ காலத்திலும் கூட தங்கள் நாட்டிற்கு செல்ல அனுமதியளித்ததற்கு ஐரோப்பிய ஒன்றிய shengan என்ற தடையில்லா போக்குவரத்து விதி வழக்கத்தில் இருந்ததே காரணம். ஆனால் தற்போது பிரிட்டனில் பாதிப்பு அதிகமாக இருப்பதால் இந்நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மட்டும் சுவிற்சர்லாந்துக்கு பயணம் செய்யக்கூடாது என்று தடை விதித்துள்ளது.
இதுகுறித்து நேற்று ஸ்விஸ் அரசாங்கம் இணையதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நீங்கள் பிரிட்டனை சேர்ந்தவராக இருந்தால் வருகிற 2021 ஆம் வருடம் ஜனவரி 1ம்தேதி முதல் நீங்கள் தேவையற்ற காரணங்களுக்காக சுவிற்சர்லாந்துக்குள் அனுமதிக்கப்படமாட்டீர்கள்”என்று கூறியுள்ளது. மேலும் பிரிட்டனை ஆபத்தான நாடாக சுவிற்சர்லாந்து கருதும் வரையில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது.