Categories
அரசியல்

உங்க தலையில நீங்களே…. மண்ணை வாரி போட்டுகிட்டீங்க…. அர்ஜுன் சம்பத் ஆவேசம்…!!!

கும்பகோணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்  இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத்  கலந்து கொண்டப்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, “திமுக அரசால் தான் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது. மேலும் ஜிஎஸ்டி வரம்பிற்குள் பெட்ரோல் டீசல் விலையை கொண்டுவந்தால் 30 முதல் 40 ரூபாய் வரையில் விலையானது குறைய வாய்ப்புள்ளது.

இவ்வாறு செய்யாமல் இருப்பதற்காகவே திமுகவானது  ஜிஎஸ்டி வரம்பிற்குள் பெட்ரோல் டீசல் விலையை கொண்டுவராமல் சதித் திட்டத்தை தீட்டி வருகிறது. இதனாலேயே எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் வாக்குறுதியில்  ஆட்சி அமைத்தவுடன் 6 கேஸ் சிலிண்டர்களை இலவசமாக வழங்குவதாக கூறி இருந்தார். ஆனால் தமிழக மக்களோ அதிமுகவை தோற்கடித்து அவர்கள் தலையில் அவர்களாகவே மண்ணை வாரி போட்டுக் கொண்டனர்.

திமுக மக்கள் விரோத அரசால் மட்டுமே பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த  நவராத்திரி காலங்களில் பொதுமக்கள் கோவில் சென்று வழிபாடு மேற்கொள்ள  தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கோவில்களைத் திறப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |