Categories
பல்சுவை

உங்க சேமிப்பு கணக்கை ஜன் தன் வங்கிக் கணக்காக மாற்றுவது எப்படி?….. வாங்க பார்க்கலாம்….!!!!!!

கடந்த  2014 ஆம் ஆண்டின் பிரதமர் நரேந்திர மோடியால் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் ஒரு லட்சம் ரூபாய்க்கான காப்பீடு, ஓய்வூதியம் உள்ளிட்ட வசதிகளோடு, மத்திய – மாநில அரசுகளின் நிதியுதவிகள் இதில்  நேரடியாகச் செலுத்தப்படுகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ், வங்கியில் கணக்கு இல்லாத 7½ கோடி குடும்பத்தினருக்குக் காப்பீடு வசதியுடன் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் மாநில தலைநகரங்களிலும் மற்றும் முக்கிய மாவட்ட தலைநகரங்களிலும் இந்தத் திட்டம்  தொடங்கி வைக்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ், வங்கி கணக்கு தொடங்குவதற்கு ஆதார் அட்டை  இருந்தால், வேறு ஆவணங்கள் தேவை இல்லை. வங்கி கணக்கு தொடங்கிய பிறகு, அவர்களுக்கு ஏ.டி.எம். கார்டு வழங்கப்படும். அதை வைத்து நாடு முழுவதும் உள்ள ஏ.டி.எம்.களில் பணம் எடுத்துக்கொள்ளலாம். ஒரு லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீடும் முப்பதாயிரம் ரூபாய்க்கான ஆயுள் காப்பீடும் வழங்கப்படும். ஆயுள் காப்பீட்டுக்கான சந்தா தொகையை இந்திய அரசே செலுத்தும். ஓய்வூதியம், காப்பீடு போன்ற வசதிகளும் அளிக்கப்படும். மத்திய, மாநில அரசுகள் அளிக்கும் நிதி உதவிகளை, வங்கிக் கணக்கு மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வளவு அம்சங்கள் நிறைந்த ஜன் தன் கணக்குக்கு மாறவேண்டும் என்ற பலர் நினைப்பார்கள். அல்லது புதிதாக ஜன் தன் கணக்கு திறக்கலாமா என்றும் யோசிப்பார்கள். அதற்குப் பதிலாக ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள சாதாரண சேமிப்புக் கணக்கையே ஜன் தன் கணக்காக மாற்ற முடியும். அந்த வகையில் உங்களது சேமிப்புக் கணக்கை பிரதான் மந்திரி ஜன் தன் வங்கிக் கணக்காக மாற்றுவது எப்படி என்று இங்கே பார்போம்.

10 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு குடிமகனும் ஜன் தன் கணக்கு தொடங்க முடியும். வங்கிக் கிளையில் தேவையான ஆவணங்கள், இதற்கான விண்ணப்பம் ஆகியவற்றை வழங்க ஜன் தன் கணக்கு திறக்கலாம். ஏற்கெனவே சேமிப்புக் கணக்கு இருப்பவர்கள் அதில் ரூபே கார்டுக்கு விண்ணப்பித்தாலே அந்தக் கணக்கு ஜன் தன் கணக்காக மாற்றப்பட்டுவிடும்.

இதற்கு விண்ணப்பிக்கும்போது வங்கிக் கிளையில் ஜன் தன் கணக்குக்கு நீங்கள் மாறவிரும்புவதையும் குறிப்பிட வேண்டும். உங்களுக்கு ரூபே கார்டு வந்த மூன்று – நான்கு நாட்களிலேயே உங்களது சேமிப்புக் கணக்கு ஜன் தன் கணக்காக மாற்றப்பட்டுவிடும்.

Categories

Tech |