Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

உங்க செல்போனில் அப்டேட் லிங்க்…..! மக்களே எச்சரிக்கை….. எச்சரிக்கை….!!!

ஆன்லைனில் தொடர்ந்து பல மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றது. நாங்கள் வங்கியில் இருந்து பேசுகிறோம். உங்களின் வங்கி கணக்குடன் செல்போனை இணைக்க வேண்டும். கேஒய்சி விவரங்களை இணைக்க வேண்டும் என்று கூறிவிட்டு அக்கவுண்ட் நம்பர் மற்றும் ஓடிபி பெற்றுக்கொண்டு அதிலிருந்து பணத்தை நூதன முறையில் திருடி வருகிறார்கள். இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வண்ணம் உள்ளது. இது மட்டும் இல்லாமல் தனியாக இருக்கும் ஆண்களை குறி வைத்து மோசடி கும்பலை சேர்ந்த பலரும் நிர்வாணமாக வீடியோ கால் செய்து பணம் கேட்டு மிரட்டி பணம் பறிக்கும் சம்பவமும் நடந்து வருகின்றது.

அந்தவகையில், செல்போனில் SMSஇல் வந்த லிங்க்-ஐ கிளிக் செய்ததால் விருதுநகரை சேர்ந்த முதியவர் ரூ.9.44 லட்சத்தை இழந்துள்ளார். வங்கியில் இருந்து வந்ததுபோல், KYC அப்டேட் கேட்டு வந்த குறுஞ்செய்தியில் இருந்த லிங்க்-ஐ முதியவர் கிளிக் செய்த உடனே, அவரது வங்கிக்கணக்கில் இருந்து மோசடிக் கும்பல் ரூ.9.44 லட்சத்தை திருடியுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் சைபர் கிரைமில் புகார் கூறியதை அடுத்து, அந்த பணம் மீட்கப்பட்டுள்ளது. இதுபோன்ற லிங்க்-ஐ கிளிக் செய்யாதீர்.

Categories

Tech |