Categories
தேசிய செய்திகள்

உங்க கிரெடிட் ஸ்கோரில் பிரச்சனையா?…. இனி கவலையை விடுங்க…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

ஒவ்வொரு நபருக்கும் கட்டாயம் ஒரு கிரெடிட் ஸ்கோர் இருக்கும். அதாவதுகிரெடிட் ஸ்கோர் என்பது ஒரு நபரின் கடன் வரலாற்றை எண் வடிவில் சுருக்கமாக சொல்வது ஆகும். ஒரு நபர் கடன் வாங்கி அதனை சரியாக திருப்பி செலுத்தி இருந்தால் அவரின் கிரெடிட் 4 நன்றாக இருக்கும். முறையாக கடனை செலுத்தவில்லை என்றால் கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும். சிபில், எக்ஸ்பீரியன்ஸ், ஈக்வி பேக்ஸ் போன்ற நிறுவனங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டுகளை வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில் சிலருக்கு கிரெடிட் ஸ்கோர் சரியாக இல்லாததால் தவறாக வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன. அதனால் கடனுக்கு விண்ணப்பிப்போர் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.கடன் கொடுக்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களும் குழப்பம் அடைந்து கடன் கொடுக்க மறுத்து விடுகின்றன. இந்நிலையில் நேற்று ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டம் முடிவுகளை வெளியிட்ட ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ்,கிரெடிட் நிறுவனங்கள் கொடுக்கும் ஸ்கோர்களில் தவறு இருந்தால் நேரடியாக ரிசர்வ் வங்கியிடம் புகார் அளிக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |