நாடு முழுவதும் ரேஷன் அட்டை மூலமாக மக்களுக்கு மலிவு விலையிலும் இலவசமாகவும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அரசு நலத்திட்ட உதவிகளைப் பெற ரேஷன் கார்டு அவசியம் என்பதால் ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயரும் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும். திருமணத்திற்குப் பிறகு கணவன் மனைவியின் பெயரை சேர்ப்பது அவசியம்.அதன் பிறகும் குழந்தை பிறந்தால் அந்த குழந்தையின் பெயரை ரேஷன் கார்டில் சேர்க்க வேண்டும்.
முகவரி தவறாக இருந்தால் முகவரியையும் மாற்ற வேண்டி இருக்கும். ஆதார் அட்டையில் இந்த விவரங்களை அப்டேட் செய்த பிறகு திருத்தப்பட்ட ஆதார் அட்டையுடன் ரேஷன் கார்டில் பெயரை உணவுத்துறை அலுவலர் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் ரேஷன் கார்டில் குழந்தையின் பெயரை சேர்ப்பதற்கு ஆதார் அட்டை மற்றும் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் அவசியம். வீட்டில் அமர்ந்தபடியே இந்த வேலையை நீங்கள் எளிதில் முடிக்கலாம். அதற்கு உணவு வழங்கல் துறையின் https://tnpds.gov.in/என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.