கொழுப்புள்ள உணவுகள்
பிரெஞ்சு ப்ரைஸ், பர்கர் போன்ற அதிக சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை உண்பது, கல்லீரல் செயல்பாட்டில் இடையூறை உண்டாக்கும். அதோடு இந்த வகையான உணவுகள் கொழுப்பு கல்லீரல் நோயின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். மேலும் இது கல்லீரலில் அழற்சி ஏற்பட வழிவகுத்து, கல்லீரலில் வடுக்களையும் உண்டாக்கும். இதைத் தவிர்க்க நினைத்தால், கொழுப்பு அதிகம் நிறைந்த உணவுகளைத் தவிர்த்து, நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட ஆரம்பியுங்கள்.
சர்க்கரை
சர்க்கரை என்னதான் ஒரு இனிப்பான பொருளாக இருந்தாலும், உண்மையில் இது ஒரு விஷம். அதோடு இது கல்லீரலின் ஆரோக்கியத்தை அழிக்கும் பொருளும் கூட. ஏனெனில், கல்லீரல் தான் சர்க்கரையை கொழுப்பாக மாற்றுகிறது. அளவுக்கு அதிகமாக சர்க்கரையை உண்ணும் போது, அது கல்லீரலால் அதிகளவிலான கொழுப்புக்களை உருவாக்க ஆரம்பிக்கும். நாளடைவில் இதன் விளைவாக கொழுப்பு கல்லீரல் நோய்க்கு வழிவகுக்கும்.
ஆல்கஹால்
ஆல்கஹாலை அதிகளவில் அருந்துவது கல்லீரலில் சேதத்தை உண்டாக்கும். அதோடு அது கல்லீரல் அழற்சிக்கும் வழிவகுக்கும். பெண்கள் ஒரு டம்ளருக்கு மேல் ஆல்கஹால் அருந்தக்கூடாது மற்றும் ஆண்கள் ஒஙர நாளைக்கு 2 டம்ளருக்கு மேல் மது அருந்தக்கூடாது என ஆள்வுகள் பரிந்துரைக்கிறது. ஆகுவே அடுத்த முறை ஆல்கஹால் அருந்த நினைத்தால், இந்த அளவை நினைவில் கொள்ளுங்கள். முடிந்தவரை மது அருந்துவரைத் தவிர்த்திடுங்கள்.
பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள்
பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுகள் நாம் சமைத்து சாப்பிட வேண்டுமானால் எளிதாக இருக்கும். ஆனால் இது கல்லீரல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும் என்பது தெரியுமா? பெரும்பாலான பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உணவுகளில் உப்பு, சர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகம் உள்ளது. இவை அனைத்துமே கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை. எனவே அடுத்தமுறை இம்மாதிரியான உணவுகளை வாங்குவதற்கு முன் உங்கள் கல்லீரலின் ஆரோக்கியத்தை நினைவில் கொண்டு, வாங்கலாமா வேண்டாமா என்று முடிவெடுங்கள்.
பால்
பாலில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளன. கல்லீரல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை உள்ளவர்கள் பால் அதிகம் அருந்துவது உகந்ததல்ல. உங்கள் கல்லீரலை சேதப்படுத்துவதை குறைக்க விரும்பினால், கொழுப்பு நிறைந்த பாலை அருந்துவதைக் குறைத்துக் கொள்வதே நல்லது. உங்கள் கல்லீரலில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், கொழுப்புள்ள பாலிற்கு பதிலாக, க்ரீன் டீ, பட்டை டீ போன்றவற்றைக் குடிக்கலாம். ஆய்வுகளிலும் க்ரீன் டீ குடிப்பது கல்லீரல் ஆரோக்கியத்துடன் தொடர்புடையதாக தெரிய வந்துள்ளது.
வெண்ணெய்
பால் பொருட்களான வெண்ணெய், கல்லீரல் பிரச்சனைகளுடன் தொடர்புடையவை. ஏனெனில் இதில் அதிகளவிலான சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளன. இது கல்லீரலுக்கு நல்லதல்ல. வேண்டுமானால் வெண்ணெய்க்கு பதிலாக, ஆலிவ் ஆயில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், கல்லீரல் நோய்களின் அபாயத்தைக் குறைக்கும்.