உங்கள உங்கள் உதடு கருமையாக இருந்தால் கவலை வேண்டாம். அவ்வாறு இருக்கும் உதட்டில் கருமையை நீக்க இதோ உங்களுக்கான சில டிப்ஸ். உதடு கருமையாக இருந்தால் வெள்ளை சர்க்கரையுடன் வெண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து உதட்டில் வாரம் மூன்று முறை தடவி வந்தால் கருமை நீங்கும். வெப்பத்தின் காரணமாக புற ஊதா கதிர்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதனால் உதடுகள் பொலிவிழந்து நிறம் மாறத் தொடங்கும். உங்கள் வீட்டில் உள்ள சில சமையல் பொருட்களை பயன்படுத்தி உதட்டை நீங்கள் இயல்பான நிலைக்கு கொண்டு வந்து விடலாம். உதட்டில் உள்ள கருமையை நீக்குவதற்கு தேனிற்கு முக்கிய பங்கு உள்ளது.
தினமும் இரவு தூங்கும் முன்பு உதட்டில் தேன் தடவி வந்தால் சில மாதங்களில் நல்ல பலன் கிடைக்கும். உதடு மிருதுவாக இருக்க எலுமிச்சை சாறை பயன்படுத்தி மசாஜ் செய்யலாம். அது உதட்டில் உள்ள கருமையை விரட்டியடிக்க தன்மை கொண்டது. எலுமிச்சை சாறை இரவு நேரங்களில் முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து விட்டு, நீரில் கழுவி விட வேண்டும். பீட்ரூட் சாறு எடுத்து அடிக்கடி உதட்டில் தடவி வந்தால் கருமை நீங்கும். உதடு வறட்சி மற்றும் உதடு வெடிப்பு போன்றவற்றை இருக்க ஐஸ் கட்டியை பயன்படுத்தி மசாஜ் செய்து வரலாம். அதனால் எப்போதும் உதடு ஈரப்பதமாக இருக்கும். மேலும் ஸ்டாபெரி பழத்துடன் தேன் மற்றும் கற்றாழை சேர்த்து உதட்டில் தடவி விட்டு ஐந்து நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். அவ்வாறு செய்தால் உதடு எப்போதும் பொலிவுடன் இருக்கும்.