இந்தியாவில் சென்ற வாரம் பிரதமர் நரேந்திரமோடி 5G சேவைகளை அறிமுகப்படுத்தியதை அடுத்து அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களும் அதன் 5ஜி சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு படிப் படியாக வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. அண்மையில் ஏர்டெல் நிறுவனம் அதன் 5G சேவைகளை முதல் கட்டமாக டெல்லி, வாரணாசி, நாக்பூர், பெங்களூர், ஹைதராபாத், மும்பை, சென்னை மற்றும் சிலிகுரி ஆகிய 8 நகரங்களில் வழங்க இருப்பதாக அறிவித்தது. அத்துடன் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் 5G சேவையானது மார்ச் 2024-க்குள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கிடைத்து விடும் எனவும் தெரிவித்தது. 5G ஸ்மார்ட் போன்களில் 4ஜி சிம் இயங்கும். அதே நேரம் 5G-ன் உயர்தர சேவையை நீங்கள் அனுபவிக்க விரும்பினால் 5ஜி ஸ்மார்ட் போனில் 5ஜி சிம் கார்டு வைத்திருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
எனினும் 5G ஸ்மார்ட் போனில் போடப்பட்டுள்ள 4G சிம் சிறந்த திறனை தரும். திரைப்படங்களை ஸ்ட்ரீம் செய்ய (அல்லது) கேம்களை அதி வேக இணையத்துடன் விளையாட விரும்புவர்களுக்கு அவசியம் 5ஜி சேவை தேவைப்படும். 5ஜி சேவையை இயக்க புது சிம் தேவையில்லை. இருப்பினும் 5G சேவையை தாங்கள் பெற வேண்டுமானால் உங்களது இடத்தில் 5G ஆதரவு இருக்கவேண்டும். மேலும் உங்களிடம் 5G ஸ்மார்ட் போன் இருக்க வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். தற்போது ஸ்மார்ட் போனில் 5G நெட்வொர்க் சேவையினை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.
# முதலில் உங்களது ஸ்மார்ட் போனில் உள்ள செட்டிங்ஸ் மெனுவிற்குச் செல்ல வேண்டும்.
# கனெக்சன் (அல்லது) மொபைல்நெட்வொர்க் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவேண்டும்.
# நெட்வொர்க் மோடை டேப் செய்து 5G/4G/3G/2G என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும்.
# தற்போது ஸ்மார்ட் போன் திரையின் வலது பக்கத்திற்கு மேலே 5G நெட்வொர்க் மோடை பார்க்க ஹோம் ஸ்க்ரீனுக்கு செல்ல வேண்டும்.