Categories
ஆன்மிகம் இந்து

உங்கள் வீட்டில் வளர்ப்பு பிராணிகள் இருக்கா..? அது தீய சக்திகளை தடுத்து நிறுத்துமாம்… ஆன்மீகம் கூறும் தகவல்…!!!

தீய சக்திகளை தடுத்து நிறுத்தும் சக்தி கொண்டது நம் வீட்டில் வளர்க்கும் வளர்ப்பு பிராணிகள். இது பற்றி சாஸ்திரம் கூறும் தகவலை இதில் தெரிந்து கொள்வோம்.

கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பது தான் நம் முன்னோர்கள் கூறும் கூற்று. அதற்கேற்றார்போல் நாம் நடந்துகொள்ளவேண்டும். வீட்டில் நாம் அதிக அளவு குப்பைகளை சேர்த்து வைத்து துர்நாற்றம் வீசுவது போல தான் கண் திருஷ்டியும் பல பிரச்சினைகளை நம் குடும்பத்திற்கு கொண்டுவரும். நம் வீட்டில் வளர்க்கப்படும் வளர்ப்பு பிராணிகள் நமக்கு வரும் கெடுதல்களை ஏற்றுக்கொண்டு வளர்ப்பவர்களை காப்பாற்றும் என்பது நம் முன்னோர்கள் கூறிய கூற்று.

இதன் காரணமாக நம் முன்னோர்கள் பூனை முதல் யானை வரை வளர்த்து வந்துள்ளனர். இதற்கு காரணம் கண்திருஷ்டி மட்டுமின்றி செய்வினை, சூனியம், ஆவிகள், பேய் பிசாசு போன்ற தீய சக்திகளிடமிருந்து நமது வளர்ப்புப் பிராணிகள் நம்மை காப்பாற்றும். ஒரு சில வீடுகளில் வளர்க்கப்படும் வளர்ப்பு பிராணிகள் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் திடீரென்று இறந்து விடும். இதற்கு காரணம் நம்மை வளர்ப்பவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க, அந்த பிரச்சனையை அந்தப் பிராணிகள் ஏற்றுக் கொள்ளுமாம்.

இன்றைய உள்ள காலகட்டத்தில் அனைவரும் நகரங்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர். ஆடு, மாடு, குதிரை, யானை போன்றவற்றை நகர்புறங்களில் வளர்ப்பது என்பது சாத்தியமில்லை. ஆனால் மீன் வளர்ப்பது என்பது அனைவராலும் முடியும். மீன் வளர்க்க வேண்டும் என்று அவசியம் இல்லை. வீடுகளில் அதிக இடமிருந்தால் நாய் பூனை போன்றவற்றை வளர்க்கலாம். குடும்பப் பிரச்சனைகளை சந்திப்பவர்கள் ஏதாவது ஒரு பிராணிகளை வளர்த்து பாருங்கள் நல்ல தீர்வு கிடைக்கும்.

Categories

Tech |