Categories
ஆன்மிகம் இந்து

உங்கள் வீட்டில் செல்வம் பெருக… இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க… மகாலட்சுமி வாசம் செய்வாள்…!!!

நம் வீட்டில் பண வரவு அதிகரிக்க வேண்டுமென்றால் நாம் ஒரு சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும். அது என்ன என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம்.

வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் 6.15க்குள், மதியம் ஒரு மணி முதல் 1.15க்குள, இரவு 8 மணி முதல் 8.15 க்குள் உப்பு வாங்கி வர வேண்டும். இப்படி வாரா வாரம் அல்லது மாதம் முதல் தேதி கல் உப்பு வாங்கி வந்து வீட்டின் பூஜையறையில் வைத்தால் செல்வம் செழிக்கும். உப்பு மகாலட்சுமியின் அம்சமாகும். வீட்டிற்குள் நுழைந்ததும் துர்நாற்றம் இல்லாமல் நறுமணம் கமழ்கிறதோ அங்கு செல்வ செழிப்பு அதிகரிக்கும் என்று கூறுவார்கள். நம் வீட்டில் எப்பொழுதும் குப்பைகளையும், அழுக்குத் துணிகளை ஆங்காங்கே போட்டு வைத்து இல்லாமல் அதனை எங்கு வைக்க வேண்டுமோ அந்த இடத்தில் வைத்து வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருந்தால் மிகவும் நல்லது.

வெள்ளிக்கிழமை தோறும் தண்ணீரால் வீட்டை கழுவி, பொருட்களை சுத்தமாக அடுக்கி வைத்திருந்தால் செல்வச்செழிப்பு அதிகமாக இருக்கும். எப்பொழுதும் இனிமையான வார்த்தைகளை பேசி, விட்டுக் கொடுத்து, சிரித்துக்கொண்டு இருக்கும் வீடுகளில் செல்வச் செழிப்பு அதிகரிக்கும். நம்மையும் நமது வீட்டையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். கட்டாயம் மகாலட்சுமி உங்கள் வீட்டில் குடியிருப்பாள். நாம் சொந்த வீட்டிற்கு அல்லது வாடகை வீட்டிற்கு செல்லும் போது, வீட்டிற்குள் முதலில் மகாலட்சுமியின் அம்சமாகிய உப்பு, மஞ்சள் பொடி அல்லது மஞ்சள் கிழங்கு, ஒரு நிறை குடம் தண்ணீர் ஆகியவற்றை கொண்டு செல்வது மிகவும் நல்லது. ஒரு வீட்டிற்குள் நாம் செல்லும்போது மகாலட்சுமியின் வடிவமான இந்த பொருட்களை கொண்டு சென்றால் நல்லதே நடக்கும்.

Categories

Tech |