இந்தியாவில் தற்போதைய அதிக வேகமான 4ஜி இணைய சேவை விட அதிக தரத்திலான இணைய சேவையை தொடங்குவதற்கான திட்டத்தை கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இதனால் நாட்டின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களுக்கான 5ஜி சேவைக்கான அலைவரிசை சோதனை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. அதன் பிறகு சோதனை வெற்றியை அடைந்ததும், மத்திய அரசு 5ஜி அலைக்கற்றைக்கான ஏலத்தை நடத்தியது. அதில் மற்ற நிறுவனங்களை விட அதிக அளவு வித்தியாசத்தில் ஜியோ நிறுவனம் அதிக ஒதுக்கீட்டை ஏலத்தில் எடுத்தது. இதனால் நாட்டில் விரைவில் ஜியோ நிறுவனத்தின் 5g சேவை பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இது குறித்து தற்போது ஜியோ நிறுவனம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் மாதத்தில் வர இருக்கும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஜியோ தனது 5g சேவை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக முக்கிய 13 நகரங்களில் மட்டும் 5g சேவை அளிக்கப்படும் என்றும் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சேவை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்களது மொபைலில் 5g சேவையை பெறுவதற்கான வசதிகள் உள்ளதா என்பதை அறியும் வழிமுறைகளை குறித்து பார்ப்போம்.
- உங்களின் ஸ்மார்ட்போன் உள்ளே இருக்கும் ‘Settings’ செல்ல வேண்டும்.
- இப்பொழுது,‘Wi-Fi & Network’ ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
- ‘SIM & Network’ என்பதை கிளிக் செய்யவும்.
- குறிப்பாக, ‘Preferred network type’ என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
- கடைசியாக, 2G/3G/4G/5G என்று இருக்கும். அங்கு 5G ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.