பேஸ்புக் தகவல்கள் கசிவு உலக அளவில் பெரும் பிரச்சனையாக இருக்கிறது. சென்ற சில வருடங்களுக்கு முன் பேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் திருடப்படுவதாக எழுந்த புகாரால், பேஸ்புக் நிறுவனம் மிகப் பெரிய சிக்கலை எதிர் கொண்டது. இதன் காரணமாக தகவல் மற்றவர்களால் திருட்டப்பட்டு இருக்கிறதா? என்பதை எவ்வாறு தெரிந்துகொள்வது என தேடிக்கொண்டிருக்கின்றனர். ஒருவேளை பேஸ்புக்கிலிருந்து உங்களது தகவல் கசிந்து இருந்தால், அதை எளிமையாக தெரிந்துகொள்ளலாம். மார்க் ஜூக்கர் பெர்க்கின் தனிப்பட்ட தகவல்கள் கூட கசிந்து இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் என்னவெனில் கடந்த 2019ம் வருடத்திற்கு பின் வெளிவந்த அப்டேட்டுகளை செய்யாமல் விட்டதால் ஏற்பட்டதன் விளைவாகும்.
இதை இலக்காக கொண்டு ஹேக்கர்கள் தங்களது விளையாட்டுகளை அரங்கேற்றுகின்றனர். ஒருவரது தனிப்பட்ட அடையாளங்களை திருடிக்கொண்டு, பல்வேறு மோசடிகளுக்கு பயன்படுத்துகின்றனர். முன்பே பேஸ்புக்கிலிருந்து கசிந்த தகவலில் நம்முடைய தகவலும் இருக்கலாம் என்ற பயம் உங்களுக்கு இருக்கலாம். அதிர்ஷ்டவசமாக, உங்களது தரவு கசிந்தவர்களின் பட்டியலில் உள்ளதா என்பதை நீங்கள் அறிந்துகொள்ள முடியும். அதற்கு நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் HaveIBeenPwned.com-க்கு செல்ல வேண்டும். அங்கு உங்களது மின்னஞ்சல் முகவரி (அ) மொபைல் எண் கசிந்ததா என்பதை நீங்கள் சரிபார்க்கலாம்.
பேஸ்புக் இணைக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரி (அல்லது) தொலைபேசி எண்ணை உள்ளிட்டு Enter-ஐ அழுத்தவேண்டும். இணையதளம் Oh no —pwned! என்ற முடிவைக்கொடுத்தால், உங்களது தனிப்பட்ட தரவு இணையத்தில் இருக்கிறது என அர்த்தம் ஆகும். நீங்கள் உடனே உங்களது Facebook கடவுச் சொல்லை மாற்றவேண்டும். குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரியுடன் பதிவு செய்யப்பட்ட பிற சேவைகளின் கடவுச் சொல்லையும் மாற்றவேண்டும். உங்களது தரவு மற்றும் கணக்கை சிறப்பாகப் பாதுகாக்க தாங்கள் பயன்படுத்தும் இணையதளங்கள் மற்றும் சேவைகளில் Two Step Verification -ஐ ஆக்டிவேட் செய்யவும்.
நீங்கள் எப்போதும் லிங்குகள் மற்றும் பிஷிங் மின்னஞ்சல்கள் (அல்லது) SMS/WhatsApp பற்றி விழிப்புடன் இருக்க வேண்டும். பேஸ்புக்கில் உள்ள எண், வங்கி உள்ளிட்ட பிறசேவைகளுக்கு நீங்கள் கொடுத்து இருந்தால் அதை மாற்றுவது நல்லது ஆகும். அதனை தொடர்ந்து பேஸ்புக்கிற்கு ஒரு தொலைபேசி எண்ணையும், வங்கி நிதி பரிமாற்ற சேவைகளுக்கு தனி எண்ணையும் பயன்படுத்துவதால் இது போன்ற ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பாக இருக்கஉதவும்.