உங்கள் துறையில் முதல்வன் திட்டத்தின் கீழ் மனுக்களை முதலமைச்சர் பெற்றுள்ளார்.
சென்னை மாவட்டத்தில் உள்ள காமராஜர் சாலையில் அமைந்துள்ள காவல் துறை இயக்குனர் அலுவலகத்தில் மகிழம்பூ மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இதில் டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட ஏராளமான காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
அதன்பின்னர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். அதன்பின்னர் அவர் உங்கள் துறையில் முதல்வர் எந்த திட்டத்தின் கீழ் காவலர்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பெற்றுக் கொண்டார்.