Categories
மாநில செய்திகள்

`உங்கள் அனைவருக்கும் தலை வணங்குகிறேன்’…. முதல்வர் ஸ்டாலின்…..!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.இதையடுத்து மக்களின் துயரை துடைக்க பேரிடர் மீட்பு குழுவினர் இரவு பகல் பாராது நிவாரண பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் சேவைக்கு தலை வணங்குகிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,தொடர்மழை அளவுக்கு அதிகமான நீர் வரத்து காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் துயரைத் துடைக்க பணியாற்றும் காவல்துறையினர், மின் துறையினர்,தூய்மை பணியாளர்கள் மற்றும் மருத்துவத் துறையினர் என நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள அனைத்து சேவைக்கும் நான் தலை வணங்குகிறேன். தன்னலம் பாராது உங்கள் சேவையாலும், தியாகத்தாலும் கோடிக்கணக்கான மக்களின் துயர் துடைக்க படுகிறது இயல்புநிலை முழுமையாக விரைந்து திரும்ப அனைவரும் சேர்ந்து உழைப்போம். மக்களை காப்போம். உங்களின் தியாகம் விலை மதிப்பில்லாதது. உங்களின் சேவை மகத்தானது. உங்களின் உள்ளத்திற்கு என் நெஞ்சார்ந்த நன்றி என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |