Categories
சினிமா

உங்களுடன் ஒரு நாள்…. “துப்புரவு தொழிலாளியான நீயா நானா கோபிநாத்”…. வைரலாகும் வீடியோ

துப்புரவு தொழிலாளர்களின் கஷ்டத்தை வெளி உலகிற்கு சொல்லும் விதமாக ஒரு நாள் துப்புரவு தொழிலாளராக விஜய் டிவி நீயா நானா கோபிநாத் வேலை செய்துள்ளார். சமீபத்தில் துப்புரவு தொழிலில் ஈடுபட்டவர்களை சந்தித்து அவர்களின் அன்றாட நிகழ்வுகளை தெரிந்து கொண்டார். அவர்களுடன் ஒருநாள் சேர்ந்து தானும் ஒரு துப்புரவு தொழிலாளியாக மாறியுள்ளார். இந்த சமூகத்திற்கு துப்புரவு தொழிலாளியின் உழைப்பு எவ்வளவு முக்கியம் என்பதை அந்த வீடியோவில் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

தினமும் காலை ஏழு மணிக்கு தொடங்கும் அவர்களின் அன்றாட வேலை மதியம் ஒரு மணிக்கு முடிகிறது. நாள்தோறும் துப்புரவு வாகனத்தை ஓட்டுவது மக்களிடமிருந்து குப்பையை சேகரிப்பது,அவர்களுடன் உரையாடுவது என ஒரு சக தொழிலாளியாக பயணம் செய்துள்ளார் அவர். அந்த வீடியோவை கோபிநாத் தனது youtube சேனலில் இரண்டு பாகமாக பதிவிட்டுள்ளார். அதனைப் பார்த்த ரசிகர்கள் இந்த முயற்சிக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |