ஒவ்வொருவரும் தங்களது வாழ்நாளில் ஒருமுறையாவது விமானத்தில் பயணம் செய்யவேண்டும் என விரும்புகின்றனர். ஆனால் விமான கட்டணம் அதிகமாக உள்ளதால் அந்த ஆசை பலருக்கும் கனவாகபோகிறது. அந்த ஆசையை தற்போது நிறைவேற்றிக் கொள்ள அருமையான வாய்ப்பு உருவாகி இருக்கிறது. இதன் வாயிலாக நீங்கள் எந்த பணமும் செலவழிக்காமல் இந்த கனவை நிறைவேற்ற இயலும். உள்நாட்டு விமான நிறுவனம் ஆன ஏர் ஏசியா, சிறந்த சலுகையை வழங்கி இருக்கிறது. ஏர் ஏசியா நிறுவனம் இலவச டிக்கெட் சலுகை வாயிலாக 50 லட்சம் இலவச டிக்கெட்டுகளை வழங்குவதாக அறிவித்து உள்ளது.
இதற்குரிய விற்பனை செப்டம்பர் 19ம் தேதி துவங்கி 25 ஆம் தேதி வரை நடைபெறும். இச்சலுகையில் இலவச டிக்கெட்டை முன் பதிவு செய்தால், அடுத்த வருடம் ஜனவரி 1, 2023 முதல் அக்டோபர் 28, 2023 வரை பயணிக்க முடியும். ஏர் ஏசியா இலவச டிக்கெட் சலுகை வாயிலாக பல்வேறு நகரங்களுக்கு நீங்கள் விமானத்தில் பயணிக்கலாம். சில சர்வதேச பயணத்திற்கும் இலவசடிக்கெட்டுகளை பெறலாம். அதிலும் குறிப்பாக பாங்காக், கிராபி, ஃபூகெட், ன்ஹா ட்ராங், லுவாங் பிரபாங், நாகோர்ன், நாகோர்ன் ஸ்ரீதாமத், மாண்டலே, புனோம் பென் மற்றும் பினாங்கு போன்ற சுற்றுலா நகரங்களுக்கு நீங்கள் சென்று வரலாம்.
ஏர் ஏசியாவின் 50 லட்சம் இலவசடிக்கெட் சலுகையை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், நிறுவனத்தின் செயலியைப் பதிவிறக்கம் செய்யவேண்டும். அதன் வாயிலாக இருக்கையை முன் பதிவு செய்யலாம். அத்துடன் நீங்கள் நிறுவனத்தின் இணையதளத்திற்குச் சென்று “விமானங்கள்” ஐகானைக் கிளிக்செய்து, உங்களுக்கு விருப்பமான நகரத்திற்கான இருக்கையை முன் பதிவு செய்யலாம். இந்த இலவச டிக்கெட்டை நீங்கள் வேறயாருக்கும் மாற்ற இயலாது. அதே சமயத்தில் குறிப்பிட்ட காலத்திற்குள் எல்லா சூழ்நிலைகளிலும் பயன்படுத்த வேண்டும் என்பதையும் நீங்கள் நினைவில்கொள்ள வேண்டும்.