Categories
உலக செய்திகள்

உங்களுக்கு மனசாட்சி இல்லையா?…. விலங்குகளை “கொன்னு குவிக்கும் எலான் மஸ்கின் நிறுவனம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

எலான் மஸ்கின் பிரபல நிறுவனம் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

உலகில் உள்ள பணக்காரர்களின் வரிசைகள் முன்னிலையில் இருப்பவர் எலான் மஸ்க் . இவருக்கு சொந்தமாக  பல நிறுவனங்கள் உள்ளது. அதேபோல் கடந்த மாதம் பிரபல ஊடகமான டுவிட்டரை  வாங்கினார். இந்த நிலையில் இவரின் நியூராலிங்க் நிறுவனம் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் மனித மூளைக்குள் சிப் ஒன்றை பொருத்தி அதனை கணினியுடன் இணைத்து, அதன் மூலம் கணினியுடன் நேரடி உரையாடலை ஏற்படுத்துவதற்கான பரிசோதனை செய்து வருகிறது.

இந்த பரிசோதனைக்காக இதுவரை செம்மறி  ஆடுகள், பன்றிகள், குரங்குகள் என சுமார் 1,500-க்கும் மேற்பட்ட விலங்குகள் கொல்லப்பட்டுள்ளது. இதன் மூலம் விலங்குகள் கடுமையாக துன்புறுத்தப்பட்டு உயிரிழப்புகளை சந்திப்பதாக கூறி நியூராலிங்க் நிறுவன ஊழியர்கள் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அமெரிக்க அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |