வாலிபரிடம் பண மோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அதியமான்கோட்டை பகுதியில் விவசாயியான பாபு என்பவர் வசித்து வருகிறார். இவரை செல்போனில் மூலம் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர் பாபுவிற்கு பரிசு விழுந்திருப்பதாகவும், அதற்கான கட்டணமாக 6 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் கட்டுமாறும் கூறியுள்ளார். இதனை நம்பிய பாபு அந்த மர்ம நபரின் வங்கி கணக்கிற்கு 6 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பி வைத்துள்ளார்.
ஆனால் பாபுவிற்கு எந்த ஒரு பரிசும் வரவில்லை. இதனையடுத்து அந்த மர்ம நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பாபு உடனடியாக மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.